திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா (32). இவர்களுடைய மகன் கோகுல்நாத் (14) மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், மகள் சாய் நந்தினி (11) மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர். கிருஷ்ணமூர்த்தியும், கீர்த்திகாவும் , காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கிருஷ்ணமூர்த்தி கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று இரவு வழக்கம் போல் அரிசி ஆலைக்கு வேலைக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, இன்று(24-07-2024) அதிகாலை வீடு திரும்பினார். அப்போது மனைவி கீர்த்திகா, மகன் கோகுல்நாத், மகள் சாய்நந்தினி ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1
of 841
Comments are closed.