விழுப்புரம் அருகே கார் மோதி 3 பேர் பலி…!
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கார் மோதியதில் சாலையில் நடந்து சென்ற ஒருவர், பைக்கில் சென்ற இருவர் என 3 பேர் பலியாகினர்.
திண்டிவனம் வட்டம், பேரணி பகுதியைச் சேர்ந்தவர்கள் அய்யனார் (32), பூபாலன் (35). நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று (29-09-2024) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டிவனத்திலிருந்து பேரணி கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்றபோது, திண்டிவனத்திலிருந்து – விழுப்புரம் நோக்கிச் சென்ற கார்,அங்கு சாலையில் நடந்து ஒருவர் மீது மோதி, பின்னர் பைக்கில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற அய்யனார், பூபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மற்றொருவரும் கார் மோதி பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.