நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி மீறல்கள் கண்காணிப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க சில அரசியல் கட்சி புள்ளிகள் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, திருச்சி உள்பட முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். அந்தவகையில் திருச்சியில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், ரூ.3 கோடியே 29 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் கூறுகையில், திருச்சியில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்ததாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், மார்ச் 6-ந் தேதி ரூ. 50 லட்சமும், 7-ந் தேதி ரூ.1.50 கோடியும், மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1.29 கோடியும் என ரூ.3.29 கோடி ரொக்கம் வருமான வரித்துறை அலுவலர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்கு lபட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்ததா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.