Rock Fort Times
Online News

26 -ந்தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சியில் நடந்த ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் தீர்மானம்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்ட வேலைநிறுத்த ஆய்த்த கூட்டம் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், உதுமான், குமாரவேல், பால்பாண்டியன், பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பாபு வரவேற்று பேசினார். மாநாட்டில் தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளரும், மாநில ஒருங்கிணைப்பாருமான வின்சென்ட் பால்ராஜ் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், ஆசிரியர், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாநாட்டில்
சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

 

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும், அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமிப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால் வருகிற 26 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முடிவில் ஆரோக்கியம் நன்றி கூறினார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்