Rock Fort Times
Online News

திருச்சியில் ஆ.ராசா எம்.பி. உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு…

நாமக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி.சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி.யை பற்றி இழிவாக பேசியதை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ. உ.சி சிலை முன்பு நிறுவனத் தலைவர் ஆர்.வி.ஹரி ஹரன் பிள்ளை தலைமையில் இன்று(10-02-2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆறுநாட்டு சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் சிவானி செல்வராஜ், அகில இந்திய வ.உ சி.பேரவை இளைஞர் அணி தலைவர் வையாபுரி, சோழிய வேளாளர் நலச்சங்கம் பாலு, நேருஜி, வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் வக்கீல் டோமினிக் செல்வம், மாவட்ட தலைவர் வக்கீல் குமரேசன், இளைஞரணி தலைவர் குளித்தலை உதயா, பொருளாளர் அழகு முருகன், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் செந்தில்நாதன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன், தில்லைநகர் கிருஷாந்த், சுப்பிரமணியன், காருகாத்த சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், ஆண்டாள் தெரு ஸ்ரீதர், உறையூர் மோகன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆ.ராசாவின் உருவப்படம் திடீரென எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஹரிஹரன் உள்பட நூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்