கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் வருகிற 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு இந்த வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் எங்கும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் கூடுதலாக சென்னைக்கு 900 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் 1,300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுமட்டுமின்றி மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல் மேலாண் இயக்குநர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.