திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீசார் தேடி வந்த நிலையில் இவர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது போலீசாரை தாக்கி உள்ளார். இதனால் போலீசார் பாதுகாப்புக்காக துரை மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். சரித்திர பதிவேடு குற்றவாளியான துரை மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 70- க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரவுடி ஒருவர் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.