திருச்சி மாவட்டம் தொட்டியம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒருவரின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவது கண்டறியப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த 3 லிட்டர் எரிசாராயம் மற்றும் 40 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திகைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 40), தமிழரசன் (28) ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.