தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் “டிரான்ஸ்பர்”… * சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமனம்..!
15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐஜியாக அவினாஷ் குமார், சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன், வடக்கு மண்டல ஐஜியாக ப்ரவீன் குமார் அபிநபு, சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக சரவண சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சரக டிஐஜியாக ஜே.மகேஷ், சென்னை மாநகர சட்டம், ஒழுங்கு இணை ஆணையராக பி.விஜயகுமார், தூத்துக்குடி எஸ்பியாக அபிஷேக் குப்தா, நீலகிரி எஸ்பியாக எஸ்.பிருந்தா, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக ஷானாஸ், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக அரவிந்த், திருவாரூர் மாவட்ட எஸ்பியாக சதீஷ்குமார், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக ரவீந்திரகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திகேயன், தாம்பரம் சட்டம், ஒழுங்கு துணை
ஆணையராகவும், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமன் குடிமைப் பொருள் வழங்கல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.