முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை நாளை(மே 21) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிள்ளியூர் ராஜேஷ் குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சர்கள் ஆக்க காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
இதேபோல, 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் அமைச்சராக போவது யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.