திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான எம்.பழனியாண்டியின் பிறந்தநாள் விழா சோமரசம்பேட்டை எம்.ஆர்.ஜே மஹாலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் கே. வைரமணி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பி.ஆர் சிங்காரம், கே.வி.எம் பிட்னஸ் ஜிம் வேதமூர்த்தி, மத்திய மாவட்ட திமுக பிரமுகர் ராஜவேல், தில்லை மெடிக்கல்ஸ் மனோகரன், அதவத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தனலெட்சுமி கொடியரசு, தீரன்நகர் பூபாலன், கொத்தட்டை ரமேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், நண்பர்கள் உறவினர்கள் நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ பழனியாண்டியின் மகன்கள் பி.விமலாதித்தன், பி.மணிபாரதி உள்ளிட்ட குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.