தேமுதிக நிறுவன தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் நேற்று உடல்நல குறைவு காலமாக காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் மற்றும் திரைப்பட பிரபலங்கள், டைரக்டர்கள் இசையமைப்பாளர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தீவு திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வழக்கமாக விஜயகாந்த் மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் தான் இந்த அளவுக்கு கூட்டம் திரளும். அப்போது அவர் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு தொண்டர்களை பார்த்து அனைவரும் ஜாக்கிரதையாக போய் வாருங்கள் என்று அன்பு கட்டளை இடுவார். இதை நினைவுபடுத்தி பார்த்த தொண்டர்கள் வழக்கமாக பத்திரமாக போய் வாருங்கள் என்று சொல்வாயே தலைவா…அந்த குரல் எங்கே என்று கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.