திருச்சியில் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவிப்பு: 5 அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு…!
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 63-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு, சகோதரரும், தொழிலதிபருமான ரவிச்சந்திரன், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன் எம்எல்ஏ,மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர். பின்னர், ராமஜெயம் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், இளைஞர் அணி ஆனந்த், மாணவரணி என்ஜினீயர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், காஜாமலை விஜய், புத்தூர் தர்மராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், ராம்குமார், கே.எஸ். நாகராஜன், கமல் முஸ்தபா, வக்கீல் இளங்கோ, முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அஹமது, மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் டி. சீனிவாச பெருமாள், திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் இன்ஜினியர் பெருவை.எஸ். முருகவேல், திருச்சி மாவட்ட போகர் நல சங்கத்தலைவர் ஆர்.ஆர்.எஸ்.பெரியசாமி,சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், அயூப்கான், டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா, நவல்பட்டு விஜி , மண்டி சேகர், சோழன் சம்பத், வட்ட செயலாளர் புத்தூர் பவுல்ராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜேசு அடைக்கலம், தென்னூர் அபூர்வ மணி, எம்.ஆர்.எஸ். குமார், தென்னூர் ராஜ்குமார், துணை அமைப்பாளர் ஸ்ரீரங்கம் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், சுபா, மஞ்சுளா தேவி, வட்ட செயலாளர்கள் பி.ஆர். பால சுப்பிரமணியன், மூவேந்திரன், பந்தல் எஸ்.ராமு, மிளகுபாறை சிவா, இ.பி.ரோடு மனோஜ், அரவானூர் தர்மராஜன், வாமடம் சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments are closed.