பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் மோதி பெண் பலி- வாகனத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்… (பதை பதைக்க வைக்கும் வீடியோ)
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே சீலைப் பிள்ளையார் புத்தூரில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை உருவாக இருந்தது. இதை அடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இந்நிலையில்,
பாதுகாப்புக்கு வந்த காவல் துறை வாகனம் (ஏ.ஆர்.போலீஸ் வேன்) சீலை பிள்ளையார்புத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று(01-02-2024) இரவு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உட்பட 3 பேர் மீது மோதியது.
இதில், 3 பேரும் அந்த போலீஸ் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். விபத்தை கண்டதும் அங்கு ஓடி வந்த பொதுமக்கள் காவல்துறை வாகனம் இந்த அளவிற்கு மோசமாக எப்படி இயக்கப்படலாம் என்று கண்டித்ததோடு அந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர், அந்த வாகனத்தை கீழே தள்ளி அடியில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போலீஸ் வாகனத்தை இயக்கிய அதன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.