Rock Fort Times
Online News

தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்: மாவட்டச் செயலாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு..!

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மே 31-ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகமான கேப்டன் ஆலயத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வரும் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் அமைப்புசார்ந்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்