Rock Fort Times
Online News

அனைத்து மகளிருக்கும் “கலைஞர் உரிமைத் தொகை” வழங்கப்படுமா?- அமைச்சர் கீதா ஜீவன் பதில் …

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இன்று ( 27.09.2023 )  நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:-

தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இ-சேவை மையங்களில் மேல்முறையீடு தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது சர்வர் கோளாறு உள்ளிட்டவை சரி செய்யப்பட்டு மகளிர் உரிமைத்தொகை தொடர்பான பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறது. ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு மாற்று வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை பெற வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல அனைத்து மகளிர்க்கும் மாதம் ஆயிரம் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்…அதிக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் என்பது பெரிதாக இருக்காது. அதனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்