மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) தலைவராக மனோஜ் சோனி (59) பதவி வகித்து வந்தார். இவர் 2017ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் 2023ம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பதவி ஏற்றார். பதவிக்காலம் முடியும் முன்பே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கர் போலி சான்று அளித்து படிப்பில் சேர்ந்தது புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும், போலி சான்றிதழ் விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என மனோஜ் சோனி விளக்கம் அளித்துள்ளார்.
Comments are closed.