இண்டிகோ, ஸ்பைஸ்-ஜெட், ஆகாஸா ஏா் போன்ற இந்திய விமான நிறுவனங்களின் சேவைகள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பால் நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமான நிலையங்களில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான ‘போா்டிங் பாஸ்’ விமான நிறுவன அதிகாரிகளால் கையால் எழுதித் தரப்பட்டது. இதனால், விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில், இன்று(20-07-2024) நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வரும் நிலையில், சென்னையில் கணினி மூலம் போர்டிங் பாஸ் வழங்கத் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மைக்ரோசாப்ட் நிறுவன இயங்கு தள பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட பிரச்சனை படிப்படியாக சீராகி வருகிறது. மதியத்திற்குள் அனைத்தும் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பித் தருவது உறுதி செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1
of 850
Comments are closed.