தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து தான் பதவி வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இந்த இடத்திற்கு ஜூன் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலிலும் காலியாக உள்ள மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும் குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மணிப்பூர் மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் 24 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலும் ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல், வரும் ஜூன் 18-ம் தேதி சட்டமன்றத்திலேயே நடைபெறும். மாநிலங்களவை பதவிக்கான போட்டி இருக்கும்பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர்களே வாக்காளர்களாக, வாக்குச்சீட்டு முறையில் தங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினரை
தேர்ந்தெடுப்பார்கள். போட்டி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்று மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். திமுகவுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால்,
முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டு இருந்தார். அவரது நியமனத்திற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்நியமனம் இருவரில் ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.