Rock Fort Times
Online News

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். முதல் கட்டமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 22) சில ஐஏஎஸ் அதிகாரிகள்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

*அந்தவகையில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சந்தியா வேணுகோபால் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் குமரகுருபரன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளராக நியமனம்

* சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமனம்

* தொழில், முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்துரி நியமனம்

* பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ் நியமனம்

* ஜவுளித்துறை ஆணையராக சோபனா நியமனம்

* தொழிலாளர் நலத்துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்

* நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா நியமனம்

* மீன்வளத்துறை இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம்

* சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார் நியமனம்

*ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்

* போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

* கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் நியமனம்

*சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இயக்குநராக ஆஷா அஜித் நியமனம்

*நில அளவை மற்றும் குடியமர்வு இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம்

*டிட்கோ முதன்மை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்

*பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய் நியமனம்

*தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர் நியமனம்

*ஊரக வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரியாக சஜீவனா நியமனம்

*சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன் நியமனம்

*சேலம் மாநகராட்சி ஆணையராக லலிதியா நீலம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்