தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுக, அதிமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2024 ம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவோடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் விஜய். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இளைஞர்களிடையே அதிக செல்வாக்கு உள்ளது.
அதனை வைத்து அடுத்த இலக்காக இந்திய பிரதமர் விஜய் என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப தவெக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்த பிரதமர் விஜய் என அடித்து கூறி வருகிறார்கள். இதற்கு, நிரந்தர பிரதமர் நரேந்திர மோடி தான் என பாரதிய ஜனதா கட்சியினரும், ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பெண் எம்எல்ஏக்கள் மோதல்,
இந்நிலையில் தவெகவின் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி
இன்று(02-09-2026) செய்தியாளர்களிடம் கூறுகையில்,
2029ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் தளபதி( விஜய்) தான்.
2026ம் ஆண்டில் என்ன நடைபெற்றது
என்பதை நாடே பார்த்துள்ளது.
2029 ம் ஆண்டில் பிரதமர் யார் என முடிவு செய்யப்போவது டெல்லி இல்லை, தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு செய்வார்கள். 2029ம் ஆண்டு இந்திய நாட்டில் மிகப்பெரிய மாற்றம்
ஏற்படும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், “அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய்யே இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது” என்று
பதிலடி கொடுத்தார்.
***

Comments are closed.