Rock Fort Times
Online News

தொகுதிகளில் நாகதோஷம்; பரிகாரம் பண்ணுங்க – ஓ.பி.எஸ்.கலகல பேச்சால் விழுந்து விழுந்து சிரித்த உறுப்பினர்கள்…!

இன்றைய (02-09-2026) சட்டப்பேரவை கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், “சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி 29 நிமிடங்களாகியும் அமைச்சர் பாம்பு கடி குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இதன் மூலம் பல சட்டமன்றத் தொகுதிகளில் நாக தோஷம் இருப்பது தெரிய வருகிறது. எனவே அமைச்சர் நாக தோஷத்தை கழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருப்பப்பட்டால் தோஷத்தை கழிக்க ஆட்களை அனுப்பி வைக்கிறோம்” என்று நகைச்சுவையாகக் கூறினார். அவரது இந்த பேச்சை கேட்டு சபாநாயகர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “தவெக அரசு அறிவியல் பூர்வமான அரசு. எங்களுக்கு தோஷம், பில்லி, சூனியம் உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு விருப்பப்பட்டால் உங்கள் தொகுதியில் கழித்துக் கொள்ளுங்கள். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருக்குற மாதிரி நாம் கேள்விபடலை என்றார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுக கூடியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன் என்றார். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றி தான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்கள் உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காணவேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்