திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து மும்பெரும் விழா நடத்தப்படுகிறது. அந்தவகையில், 2026-ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 15-ம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி, திராவிட இயக்க வளர்ச்சிக்காகப் பங்காற்றிய மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கழக விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
- பெரியார் விருது – விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
- அண்ணா விருது – சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்
- கலைஞர் விருது – துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
- பாவேந்தர் விருது – மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
- பேராசிரியர் விருது – தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
- மு.க.ஸ்டாலின் விருது – இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா
இவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

Comments are closed.