Rock Fort Times
Online News

போராடும் தூய்மை பணியாளர்களை முதல்வர் எப்போது சந்திப்பார்?* உதயநிதி கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்..!

தமிழக சட்டப்பேரவையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார்? அவர்களை எப்போது சந்திப்பார்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “தூய்மை பணியாளர்களின் கோரிக்கையில் நிர்வாகப் பிரச்சினை மட்டுமின்றி, நிதி சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன. அவர்கள் 15 நாட்களாக போராடுவதாக சொன்னார்கள்; கடந்த ஆட்சியில் 100 நாட்களைத் தாண்டியும் போராட்டம் நடந்தது” என்று பதிலளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்