Rock Fort Times
Online News

2026-27 கல்வியாண்டிற்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் எப்போது? அதிகாரப்பூர்வ நாட்காட்டி வெளியீடு! 

தமிழ்நாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பள்ளி நாட்காட்டியை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் வேலை நாட்கள் 210ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும், ஜூன் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17 முதல் தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 தொடங்கி 23 வரை நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கி, புத்தாண்டிற்கு பின்னர் ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

அரசு விடுமுறை நாட்கள்

ஜூன் 26 – மொஹரம்

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்

ஆகஸ்ட் 26 – மிலாது நபி

செப்டம்பர் 4 – கிருஷ்ண ஜெயந்தி

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி

அக்டோபர் 19 – ஆயுதபூஜை

அக்டோபர் 20 – விஜயதசமி

நவம்பர் 8 – தீபாவளி

டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

ஜனவரி 1 – ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 15 – பொங்கல்

செப்டம்பர் 14 – விநாயகர் சதுர்த்தி

ஜனவரி 16 – திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 – உழவர் திருநாள்

ஜனவரி 23 – தைப்பூசம்

ஜனவரி 26 – குடியரசு தினம்

மார்ச் 10 – ரம்ஜான்

மார்ச் 26 – புனித வெள்ளி

ஏப்ரல் 8 – தெலுங்கு வருடப்பிறப்பு

ஏப்ரல் 14 – தமிழ் வருடப்பிறப்பு / டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்

ஏப்ரல் 19 – மகாவீர் ஜெயந்தி. இதில் செப்டம்பர் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால், அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களாக அமைகிறது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. தொடர்ந்து, செப்டம்பர் 14 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால், அதற்கு முன்னர் இருக்கும் வார விடுமுறையுடன் சேர்ந்து, தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அக்டோபர் மாதத்தில் 19 மற்றும் 20 தேதிகளில் (திங்கள், செவ்வாய்) ஆயுத பூஜை, விஜய தசமி வருவதால், அதற்கு முன்னர் இருக்கும் வார விடுமுறையுடன் சேர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. நவம்பர் மாதம் 8ம் தேதி கொண்டாப்படும் தீபாவளி ஞாயிற்றுகிழமை வருவதால், வார விடுமுறையாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. மேலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் கொண்டாடப்படுவதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்