மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை… * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு.அன்பழகன் உறுதி!
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம், மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் நே.பொன்மணி, துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று (அக்டோபர் 8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, பி. ஜெயா நிர்மலா மற்றும் துணை ஆணையர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த 29ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டபோது கொண்டு வரப்பட்ட 50 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதில் அளித்து மேயர் அன்பழகன் பேசுகையில், மாரிஸ் மேம்பாலப் பணிகளில் மாநகராட்சி பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டது, ரயில்வே துறையில் தான் பணிகள் தாமதம் ஆகிறது. கலங்களாக குடிநீர் வருவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து மாமன்றத்தில் பேசினர். மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments are closed.