தமிழக சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் மீது இன்று (ஆகஸ்ட் 7) விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு எதிராக அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்ததாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி 3 முறை தோல்வி அடைந்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த திமுக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் கே.என்.நேரு, முதலமைச்சரை புகழ்ந்து பேசுவது இயல்பு, அதே நேரம் இந்த விவகாரத்தில் சண்டை வளர்க்காமல், மேகதாது விவகாரத்தில் கருத்து மாறுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்
கொள்வதாக கூறினார். மேலும் மேகதாது விஷயத்தில் முன்னாள்
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் கூட காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுத்தார் என்பது தான் வரலாறு என தெரிவித்தார்.

Comments are closed.