திருச்சி- மதுரை ரோடு குப்பான்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரமேஷ் (வயது 37). இவரது மனைவி கௌசல்யா (வயது 23). இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே உள்ள பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது ரமேஷ் திடீரென காவிரியில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினார்.இதில் ரமேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிாிழந்தாா். இது குறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.