டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டோம் – மேலூரில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி திட்டவட்டம்!
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுங்கத்துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி சுரங்கத்திற்கு அனுமதி கூறி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சரும் இதில் திட்டவட்டமாக இருக்கிறார். எனவே, ஒருபோதும் மதுரை மாவட்டத்திற்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரவே வராது. ஆகவே விவசாயிகள் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் மிகவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.