Rock Fort Times
Online News

விடாது துரத்தும் அமலாக்கத்துறை! தொழிலதிபர் திண்டுக்கல் ரத்தினம் வீட்டில் மூன்றாவது முறையாக சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபர் கே. ரத்தினம். தரணி குழுமம் நிறுவனராக இவர் இருக்கிறார். மாவட்ட அளவில் பல தொழில்களை செய்து வரும் நிலையில், இன்று ( நவ.28 )அவரின் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரத்தினத்தின் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2 மணிநேரத்திற்கு மேலாக 2 கார்களில் வந்த 8க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே 2 முறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது முறையாக சோதனை நடைபெறுகிறது.
மணல்குவாரி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி நிகழ்விடத்தில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடக்கிறது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்