Rock Fort Times
Online News

ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊர் செல்லும் வாக்காளர்கள்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் அதிர்ச்சி…!

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை( ஏப்.23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர்களில் பலர் வெளியிடங்களில் தங்கி வேலை பார்ப்பதால் அவர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சிலர் ரயில்களிலும் முன்பதிவு செய்து செல்கின்றனர். சிலர் விமானத்தை நாடுகின்றனர்.
இதனை விமான நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை- தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் 17,527 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237, சென்னை- கோவைக்கு ரூ.12,027ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்ததால் பயணிகள் பேருந்து, ரயில்களை நாடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்