Rock Fort Times
Online News

தமிழகத்தில் நாளை (ஏப்.23) வாக்குப்பதிவு: எந்தெந்த ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்..!

தமிழகத்தில் நாளை (23-04-2026) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ‘இசிஐநெட்’ இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை வைத்தோ புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை ‘ஓ.டி.பி.’ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.
அதன் விவரம் வருமாறு:-

1.ஆதார் அட்டை

2.புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகங்கள்

3.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை

4.தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை

5. ஓட்டுநர் உரிமம்

6.பான் கார்டு

7.தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை

8. பாஸ்போர்ட்

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய அல்லது மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அல்லது சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

12. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
‘பூத் சிலிப்’ என்ற வாக்காளர் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கு செல்லத்தக்கதல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால்
இவற்றில் எந்த ஆவணத்தை வைத்தும் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்