தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளி மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் இருந்து தருமபுரி நோக்கி ஒரு காரில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். சாணமாவு என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.