கர்நாடாக மாநிலம் சாம்ராஜ் நகர், கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55). இவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சகநண்பர்களுடன் தங்கி ஊர் ஊராக சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற பொருட்கள் விற்பனை செய்துவருகிறார். இந்நிலையில் வளையெடுப்பு கிராமத்தில் பொருட்களை விற்பனை செய்ய சென்றபோது, சிலர் பிள்ளை புடிக்கிறவன் வந்துடான் என்று சத்தம் போட்டதாகவும், ராசப்பா, தான் டார்ச் லைட் மற்றும் கடிகாரம் விற்பனை செய்ய வந்துள்ளேன் என்று சொல்லிகொண்டு இருக்கும்போதே, சிலர் அவரை பிடித்து தலை, முகம், உடம்பு, கை மற்றும் காலில் தொடர்ந்து மாறி மாறி அடித்துள்ளனர்., வலிதாங்க முடியாமல்அலறிய ராசப்பா குறித்த தகவல் போலீஸ்க்கு தெரியவே போலீசார் வந்து ராசப்பாவை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் வளையெடுப்பு கிராமத்தை சேர்ந்த ஆகாஸ், மாரியப்பன், மருதை, . தினேஸ், ராஜா சிவா, கம்பராயன் பாஸ்கர் , .சம்பத், சூரியா, செல்வராஜ்,காளிமுத்து, லோகநாதன்,ஆகிய 15 நபர்கள் மீது ஜம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.