ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கப்படாததால் காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு தினமும் முறையாக குடிநீர் வழங்க கோரி இன்று(18-03-2025) காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Comments are closed.