Rock Fort Times
Online News

கோவையில் திமுக சார்பில் முப்பெரும் விழா-முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்பு…!

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவு, 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று(15-06-2024) மாலை தொடங்கியது. விழாவில் திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டம் மாநாடு போல களை கட்டி இருந்தது.  முப்பெரும் விழாவில் பங்கேற்க கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி வருகின்றனர். அவர்கள் பேசி முடித்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா பேருரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்