Rock Fort Times
Online News

காவல்துறைக்கு பெருமை சேர்த்த விஜயகாந்த்…

தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் விஜயகாந்த் நடித்த படங்கள் ரசிகர்களால் அதிகம் ரசித்து பார்க்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தஅளவுக்கு நிஜ போலீஸ் அதிகாரி போலவே அவரது நடை, உடை, நடிப்பு என அனைத்தும் அம்சமாக இருக்கும். அந்தவகையில் போலீஸ் கேரக்டரில் அவர் நடித்த ஊமை விழிகள், சத்ரியன், மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, வாஞ்சிநாதன், ஹானஸ்ட்ராஜ், தர்மம் வெல்லும், வீரம் வெளஞ்ச மண்ணு, தாய்மொழி ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதில் பெரும்பாலான படங்கள் தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது கேரக்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விஜயகாந்த்க்கு தனி மவுசு இன்றளவும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்