Rock Fort Times
Online News

கரூரில் உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம்- விஜய் அறிவிப்பு…!

கரூரில், வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று( செப்.27) பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்