Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு 100 சதவீதம் ஆதரவு கொடுப்போம்… * பிரேமலதா விஜயகாந்த்..!

தேமுதிகவின் 22-ம் ஆண்டு கட்சி தொடக்க நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சி கொடியினை, பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரார்த்தனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தேமுதிகவின் 22ம் ஆண்டு தொடக்க விழா இது. தமிழ்நாடு முழுவதும் இதனை கொண்டாடுகிறோம். விஜயகாந்த் எந்த இலட்சியத்திற்கு இந்தக் கட்சியினை ஆரம்பித்தாரோ, அந்தக் கனவை தொண்டர்களுடன் இணைந்து வென்றெடுப்போம். தேமுதிக தொடக்க நாள், விநாயகர் சதுர்த்தியுடன் இணைந்து வந்துள்ளது” சிறப்பு. அண்ணன் ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆகையால் இடைத்தேர்தலில் தேமுதிகவின் ஒத்துழைப்பு 100% இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன். அவரவர் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என தேர்தலில் உழைப்பார்கள். ஆனால், இறுதியில் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு” என்றார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு. நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம். திமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கும், இரு தொகுதிகளுக்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும்” என்றார். திமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக இருந்த எங்களைவிட, தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுத்தார்கள் என திருமாவளன் பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “இது மட்டுமல்ல; பல்வேறு விஷயங்களுக்கு வருகிற 16-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் பதிலளிக்கிறேன்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்