கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பாக தவெகவினர் முறையிட்டனர். கூட்ட நெரிசல் பலி தொடர்பான சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த விவகாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை(29-09-2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.