சிறப்பாக பணியாற்றிய 180 தமிழக காவல்துறை அலுவலர்களுக்கு ‘அண்ணா பதக்கம்’… * முதல்வர் விஜய் அறிவிப்பு..!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 180 தமிழக காவல்துறை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுமென தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைக் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும் அர்ப்பணிப்போடு பணியாற்றிய அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் தமிழக முதலமைச்சரால் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பதக்கங்களை 180 அலுவலர்கள் பெறுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் கடலுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது தனது இரவுப் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர் கடலில் குதித்து அச்சிறுவனை மீட்டார். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலைப் பாராட்டி இவருக்கு ”தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார். இந்த பதக்கங்கள் முதலமைச்சர் சி. சோஜப் விஜயால் மற்றொரு அரசு விழாவில் வழங்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.