Rock Fort Times
Online News

எல்பின் நிறுவன மோசடி வழக்கில் வி.சி.க கட்சி கவுன்சிலர் பிரபாகரன் கைது !

திருச்சி மன்னார்புரத்தில் எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் மீது முறைகேடு புகார் எழுந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் திருச்சி மாநகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரனை போலீசார் இன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி கவுன்சிலர் பிரபாகரனை போலீசார் மதுரை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மோசடி வழக்கு தொடர்பாக கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்