தென்னக ரெயில்வே திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பின்வரும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12664) வருகிற 30-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி, 6-ந்தேதி மற்றும் 20ந்தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதேபோல் கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12666) இன்று ( 27.05.2023 ) , அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி மற்றும் 17-ந்தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மேலும் ஜூன் மாதம் 10-ந்தேதி மட்டும் 35 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16352) வருகிற 28-ந்தேதி, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி, 4-ந்தேதி, 8-ந்தேதி, 11-ந்தேதி, 15-ந்தேதி மற்றும் 18-ந்தேதிகளில் 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். மேலும் வருகிற 11-ந்தேதி திண்டுக்கல்-பூங்கொடி ரெயில் நிலையங்களுக்கு இடையே 20 நிமிடங்கள் தாமதம் ஆகும். ஹூப்ளி-தஞ்சை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07325) அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி, 13-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக திருச்சிக்கு வந்து சேரும். இதனால் அந்த ரெயில் 40 நிமிடம் தாமதமாக தஞ்சையை சென்றடையும். சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16127) வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி வரை திருச்சியில் 30 நிமிடம் தாமதம் ஏற்படும். மேலும் தாம்பரம்- நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:06011) வருகிற 29-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி, 12-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் திருச்சியில் 20 நிமிடம் தாமதம் ஏற்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.