Rock Fort Times
Online News

வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வீடு உள்பட10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…!

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இவர் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர், காலை 7.30 மணி முதல் சோதனையிட்டு வருகின்றனர். அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, சென்னை வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவரது அலுவலகங்களிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையை தவிர்த்து கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்