நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து திமுக, அதிமுக, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார். அந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், ஆர்.தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.