மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர், 12-ம் தேதி காரைக்குடி, தென்காசி மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி கோயில், பைரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் டி. தேவநாதனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்யவிருந்த காரைக்குடி வாகனப் பேரணி முன்னதாக ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், தென்காசியில் அமித் ஷா பிரசாரம் செய்யவிருந்த வாகனப் பேரணியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அமைச்சர் அமித்ஷா ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரின் வருகை சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.