ஒடிசாவில் இருந்து திருச்சி நோக்கி கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் ஈச்சர் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை மறித்து போலீசார் சோதனை செய்தபோது அதில் 24 அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதுகுறித்து அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பச்சைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34) என தெரிய வந்தது. இவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததோடு கார், லாரி போன்ற வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்ததும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது . இந்த கஞ்சா கடத்தலில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1
of 927
Comments are closed, but trackbacks and pingbacks are open.