Rock Fort Times
Online News

உதயநிதி ஸ்டாலின் கைது: திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் திமுகவினர் தரையில் அமர்ந்து போராட்டம்…! (வீடியோ இணைப்பு)

தஞ்சையில் நேற்று( ஆகஸ்ட் 3) திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக த.வெ.க. மகளிர் அணியினர் தஞ்சை போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் தலைமையில் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து த.வெ.க.அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றி சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்