சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை எரித்து சாம்பலாக்கி விடும்…* உதயநிதி பேச்சுக்கு த.வெ.க. அமைச்சர்கள் கண்டனம்…!
தஞ்சாவூரில் நேற்று(03-08-2026) திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது பேச்சுக்கு மாற்று கட்சியினர் மற்றும் அரசியல்
கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த், உதயநிதியின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்? அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவுக்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? டீசென்ட் அப்ரோச் – டீசென்ட் அட்டாக்’ கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் தலைவர் விஜய்யை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரமேஷ்,
அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்
கொள்வது நல்லது. பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால், சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான கருத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும் மரியாதையுடனும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.