துணை முதல்வர் ஆனார் உதயநிதி ஸ்டாலின் – செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு : இலாகா விவரம்…!
துணை முதல்வராக உதயநிதி இன்று(29-09-2024) பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன், ஆவடி நாசர் ஆகியோரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதற்கான விழா சென்னை ராஜ்பவனில் இன்று நடந்தது. இவர்களில், ஆவடி நாசர், பல்வேறு சர்ச்சைகளால் கடந்தாண்டு பதவி பறிக்கப்பட்டவர். அவரும் இன்று பதவியேற்றார். அமைச்சர்களாக பதவியேற்ற நால்வருக்கும், கவர்னர் ரவி, முதல்வர், மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறையும், மதுவிலக்குத்துறையும் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறையும், நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், மதி வேந்தனுக்கு ஆதி திராவிட நலத் துறையும், கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டு துறையும், முதல் முறையாக அமைச்சர் பொறுப்பேற்கும் கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments are closed.